ஜ.தே.கட்சியுடன் கூட்டமைப்பினரை இணையுமாறு அழைப்பு!

அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவேண்டும். அமைச்சுப் பதவிகளை பெற்று வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைவதால், வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆளுங்கட்சியில் அங்கம் வகித்ததால் மலையகத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு […]

டென்மார்க் பாராளுமன்றத்தில் தமிழர் திருநாள்

தமிழர் வாழ்வில் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பண்பாட்டு சிறப்பான தைப்பொங்கல் திருநாளானது எமது பண்பாட்டில் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டிய தமிழின அடையாள மரபுகளில் ஒன்று, ஆகையால் அது தமிழர் திருநாளாக அடையாளப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றது. அதற்கமையவே தமிழின அடையாள மரபை வெளிப்படுத்தும் வகையில் புலம் பெயர்ந்து நாம் வாழும் டென்மார்க் நாட்டில் டெனிஸ் மக்களுடனான இணைவாக்க அடிப்படையில் பண்பாட்டு பரிமாற்றலை முன்நிறுத்தி டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் பாராளுமன்றத்தில் வரும் 14.01.2019 திங்கள் அன்று தமிழர் […]

இராணுவம் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் – அனந்தி

மண்டைதீவு உட்பட வடபுலத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளன என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இராணுவம் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் சர்வதேச கண்காணிப்புடன் மனித புதை குழி தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட […]

முன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை

இலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தனர் என்ற குற்றத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 185 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 185 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 ஆண்டுகளில் சிறையில் அனுபவிக்க முடியும் என்று நீதிபதி தண்டனைத் தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தைச் […]

சவேந்திரசில்வாவின் பதவியை மீளாய்வு செய்ய கோரும் அனந்தி!

நூற்றுக்கணக்கான குழந்தைகள் பசியோடு வரிசையில் நின்ற போது மல்ரிபரல் செல் அடித்து நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கொன்ற குற்றவாளியும், இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாகவும் சவேந்திர சில்வாவே இருந்துள்ளார். இது தொடர்பான நேரடியான சாட்சியங்களும் உள்ளன எனத் தெரிவித்துள்ள ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவரும், முன்னாள் வடமாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தமிழ்மக்களுடைய மனங்களை ஜனாதிபதி வெல்ல வேண்டுமாயின் போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக […]

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா!

சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று முதல் இவர் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, 1984ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்தவர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய இவர், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவாக இருந்த, 53 ஆவது டிவிசனின், வான்வழி நகர்வுப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், […]

மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம்

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார் என, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதி சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரா என்பது குறித்து, விசாரிக்க தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன கோரியிருந்தன. இதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பவர் மகிந்த […]

வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை நீச்சல் தடாக பணிகளை குழு ஆராய்வு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ரேவடிக்கடற்கரையில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் நீச்சல் தடாகத்தை கொழுப்பிலிருந்து வருகைதந்த குழுவினர் இன்று பார்வையிட்டனர். விளையாட்டுத்துறை மற்றும் நிதியமைச்சு உயரதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் ,பருத்திததுறை பிரதேச செயலர் ,வல்வெட்டித்துறை தவிசாளர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் நீச்சல் தடாகத்தின் பணிகளைப் பார்வையிட்டனர்.

மணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன்ன காரணம்

தனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முனைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகரசபையில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோட்டிற்கு சிம்மசொப்பனமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினராக இருந்த மணிவண்ணன் திகழ்ந்துவந்தார். இந்நிலையில் மணிவண்ணனின் யாழ் மாநகர உறுப்பினர் பதவியை பறிப்பதற்கு தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சி […]

சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் நேற்று, பொதுஜன முன்னணி தலைமையகத்தில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நாங்கள் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம். சரியான நேரத்தில் எமது வேட்பாளரை அறிவிப்போம். இப்போது நாங்கள் ஒரு பரந்தளவிலான கூட்டணி ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறோம். சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில், அதிபர் […]

சிறீலங்கா இராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்!

இலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. தற்போது வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்தார்கள் என்றால் அது அவர்கள் கடமை என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், திடீரென்று வந்து தமிழ் மக்களுக்கு அபிமான வேலைகளைச் செய்வதால் இராணுவம் முற்றிலும் மாறிவிட்டது என்று அர்த்தமுமில்லை. இதைக் கூட மக்களுக்கு செய்யாது எதிர்வரும் மார்ச் மாதம் […]

நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பாரிய சுற்றிவளைப்பு!

இலங்கையில் கடந்த வருடம் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்புக்களில் மாத்திரம் 40290 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரியவருகையில், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய 14 விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் 2018 இல் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.