மணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன்ன காரணம்

தனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முனைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபையில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோட்டிற்கு சிம்மசொப்பனமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினராக இருந்த மணிவண்ணன் திகழ்ந்துவந்தார். இந்நிலையில் மணிவண்ணனின் யாழ் மாநகர உறுப்பினர் பதவியை பறிப்பதற்கு
தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினரான யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டும் சதித்திட்டம் தீட்டினர்.

அதனடிப்படையில் மணிவண்ணன் யாழ் மாநகர பகுதியைச் சேர்ந்தவரல்ல எனவே அவரது உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி தமது ஆதரவாளர் ஒருவர் ஊடாக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து உயர் நீதிமன்று மணிவண்ணனுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில் தனை எதிர்த்து மணிவண்ணன் மேன்முறையீடு செய்தார். குறித்த மேன் முறையீட்டின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது இடைக்காலத் தடை விதித்த வழக்கு 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் இடைக்காலத் தடைக்கு எதிரான மேன் முறையீடு வழக்கை அம் முடிவு வரும்வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதனையடுத்து சுமந்திரனை நோக்கி ஒரு இளம் சட்டத்தரணியான அரசியல்வாதியின் வாழ்க்கையை ஏன் இப்படி பாழாக்க நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்தபோதே சுமந்திரன் மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முனைவதாக குறிப்பிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்