அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை செயற்படுத்துமாறு வலியுறுத்தல்

அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகளை செயன்முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகள் பல இன்னும் அமுலாக்கப்படவில்லை.

இறுதியாக ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் பருவகால மனித உரிமைகள் ஆய்வுக் கூட்டத்தொடரில் வைத்து அரசாங்கம் குறித்த பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியது.

ஆனால் காணாமல் போனோர் அலுவலகத்தைத் தவிர ஏனைய பொறிமுறைகளுக்கான நிதி ஒதுக்கங்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியாக்கப்படவில்லை.

மேலும் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை மனித உரிமைகள் மாநாட்டில் முகம் கொடுக்க உள்ள போதும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான காரியங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆகியவை மீதான நம்பிக்கையானது உறுதிமொழிகள் செயற்பாடுகளாக மாற்றம் பெறுவதிலேயே தங்கியுள்ளது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்