பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மகளிர் விவகார அமைச்சரால் மாணவர்களுக்கு மதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது!

வட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் வறுமைக் கோட்டிற்குள் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஏழு மாணவர்களுக்கு இவ்வாறு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. வட மாகாண கல்வித் திணைக்கள வளாகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்வில் இரண்டு மாணவிகள் உள்ளிட்ட எழு மாணவர்களுக்கும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மிதிவண்டிகளை வழங்கி சிறப்பித்திருந்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்