தனியார் ஒருவரின் அணைக்கட்டால் கிராம மக்கள் பாதிப்பு!

கிளிநொச்சி திருநகர்ப் பகுதியில் உள்ள சித்தப்பா கடைச்சந்திக்கு முன்னால் உள்ள கழிவு வாய்க்காலை தனியார் ஒருவர் மண்மூடைகள் கொண்டு மறித்ததனால் வெள்ளநீர் சுமார் ஆறு அடிவரை தேங்கி வீதிக்கும் மக்கள் குடியிருப்புக்கும் சென்றதனால் கிராம மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி இருந்தனர்

இதனைத் தொடர்ந்து அக் கிராம அபிவிருத்திச் சங்க தலைவரினால் கரச்சி பிரதேசசபைச் செயலாளர் கம்சநாதனுக்கு நேற்று இரவு தொலைபேசி மூலம் தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து

குறித்த பகுதிக்கு விஜயம் செய்த கரச்சி பிரதேசசபைச் செயலாளர் கம்சநாதன் மற்றும் பணியாளர்கள் கிளிநொச்சி பொலிசாரையும் அழைத்து அவர்கள் முன்னிலையில் குறித்த அணை உடைத்து வெல்ல நீர் செல்ல ஆவனை செய்துள்ளனர்

குறித்த அணை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

தனிநபர் அண்மையிலும் குறித்த கழிவு வாய்க்காலை பேரல்கள் மற்றும் கொங்கிறிற் கொண்டு தடுத்திருந்தார் அதனையும் கராச்சி பிரதேசசபை பணியாளர்கள் கழிவு நீர் செல்வதற்காக
உடைத்து விட்டிருந்ததுடன் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக கரச்சி பிரதேச சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது இன் நிலையிலையே குறித்த தனிநபர் மீண்டும் இக் கழிவு வாய்க்காலை மறித்து அணைகட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்