தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் போகின்றது டெலோ!

உள்ளுராட்சி சபை தேர்தல் கூட்டு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பேசப்போவதாக டெலோ அறிவித்துள்ளது.அக்கட்சியின் முக்கியஸ்தரான சிறீகாந்தா இன்றிரவு ஊடகங்களிற்கு கருத்து வெளியிடுகையில் இன்று உள்ளுராட்சி தேர்தல் கூட்டு தொடர்பில் ஈபிஆர்எல்எவ்,தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் அமைப்புடன் பேச்சுகளை நடத்தியதாக தெரிவித்த அவர் டெலோ அரசியல் ஏமாளிகள் அல்லவெனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நாளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பேசப்போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் பிளவினை உடனடியாக சீர்செய்யுமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதன் தலைவர் இரா.சம்பந்தனிற்கு பணித்துள்ள நிலையில் இரா.சம்பந்தனும் தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் சிறீகாந்தா தெரிவித்தார்.
கிழக்கு மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி விட்டுக்கொடுப்பின்றி செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர் தமது கட்சி சுமூகமான சூழலையேற்படுத்த பெருமளவு விட்டுக்கொடுப்புக்களை செய்த போதும் தமிழரசுக்கட்சி அதற்கு தயாராகவில்லையென தெரிவித்தார்.

இதனிடையே டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூட்டமைப்பு தலைவருடன் பேச்சுக்களை நடத்தியமை தொடர்பாக தமக்கு தெரியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்