ஓமந்தை பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கைது

வவுனியா -ஓமந்தை பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா ஓமந்தை அலகல்லுபோட்டகுளம் பகுதியிலுள்ள 16வயதுடைய சிறுமியின் வீட்டிற்குச் சென்று நல்லுறவுடன் பழகிய நபர் ஒருவரே இவ்வாறு குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

நேற்று மாணவி வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை குறித்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார் என அறியவந்துள்ளது. கடந்த மாதம் 29ம் திகதி ஓமந்தை பொலிஸாரிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து நேற்றைய தினம் குறித்த மாணவியின் வாக்குமூலம் பெறப்பட்டது.இதையடுத்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவித்து சந்தேகத்தில் நொச்சிக்குளம் பாடசாலையின் ஆசிரியரான குமாரசிங்கம் இந்திரசிங்கம் (வயது-50) என்பவர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியாவில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டம் மகாறம்பை குளம் பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வீடொன்றிலிருந்து ஆணொருவரும், பெண்ணொருவரும் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் 13வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய 17வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*