இசைப்பிரியாவின் மரணம் குறித்து கேள்வியெழுப்பும் பிரான்சிஸ் ஹரிசன்!

ஊடகவியலாளர் இசைப்பிரியா கொல்லப்பட்டமை தொடர்பில் அறிந்திருந்தும், அது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இசைப்பிரியாவை இலங்கை இராணுவமே கொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுவதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பதிவேற்றியுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மதிப்பிற்குரிய அமைச்சர் மங்கள சமரவீர அவர்களே!

ஊடகவியலாளர் இசைப்பிரியா கொல்லப்பட்டதில் உங்களுக்கு வருத்தம் இருந்தால், அதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போதும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையே.

ஐக்கிய நாடுகள் சபை கூட இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் தான் கொன்றுவிட்டது என்று கூறுகிறது” என பிரான்சிஸ் ஹரன்சின் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரான்சிஸ் ஹரிசன் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக, மேரி கொல்வின் அம்மையாருடன் இணைந்து வெள்ளை கொடி விவகாரம் தொடர்பில் பல்வேறு தகவல்களை திரட்டி வெளியிட்டிருந்தார்.

மேலும், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரான்சிஸ் ஹரிசன் ஐ.நா சபையிலும் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்