சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு நிகழ்வு யேர்மன் தலைநகரில் நடைபெற்றது. கடும் குளிரையும் கவனத்தில் கொள்ளாது தாயக உறவுகளுக்காக நீதி கோரி பல்லின மக்களிடம் தமது கவனத்தை கொண்டுசென்றதோடு, தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களால் விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச பொதுமன்னிப்புச்சபை அமைப்பில் பாரிய அளவில் பிரதி எடுக்கப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்ட மனிதவுரிமை சாசனத்துக்கு முன்பாகவும் “146679 ஈழத்தமிழர்களுக்கு என்ன நடந்தது” ? எனும் பதாதையை தாங்கிய வண்ணம் இலங்கை தொடர்பான மனிதவுரிமை மீறல் சார்ந்த விடயத்துக்கு நிழற்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
கொழும்பு அரச தொலைக்காட்சிஒன்றின் அரசியல் விவாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அரச தொலைக்காட்சியான வசந்தம்
கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தற்போதைய அரசில் அமைச்சராக அல்ல அதனை தாண்டி பலம் மிக்க ஒருவராக இருப்பதாக தெரிவித்துள்ளார் தமிழ்
மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடுவதாக கூட்டமைப்பினர் எம்மீது பிரச்சாரங்களை செய்துவந்தனர்.ஆனால் இதுவரை எம்மை சந்திக்க ஆர்வமற்றிருக்கின்ற மஹிந்த ஓடோடிப்போய்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*