இலங்கையின் மூலப் பெயர் ”ஈழம்” – வடக்கு முதல்வர் வலியுறுத்து!

இலங்­கை­யின் மூலப் பெயர் ‘சிங்­கலே’ என்­பது தவ­றா­னது. ஈழம் என்­ப­து­தான் மூலப் பெய­ரா­கும். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரிவித்துள்ளார்.

மகிந்த ஆட்­சிக் காலத்­தில் பிரதி அமைச்­ச­ராக இருந்த றியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­கர தெரி­வித்த கருத்­துக்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே, வடக்கு முத­ல­மைச்­சர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தேவ­நம்­பிய தீசன் ஒரு தமிழ் மன்­னன் என்­பதை சரத் வீர­சே­கர ஏற்­றுக் கொள்­ள­ வில்லை. அந்த மன்­னன் சிங்­கள மொழி தோன்­று­வ­தற்கு முன்­னர் வாழ்ந்த மன்­னன். ஆகவே அவர் எவ்­வாறு ஒரு சிங்­க­ள­வ­ராக இருக்க முடி­யும்? சிங்­கள மொழி­யா­னது கிட்­டத்­தட்ட கி.பி 6ஆவது அல்­லது 7ஆவது நூற்­றாண்­டின் பின்­னர் மட்­டுமே தோற்­றம் பெற்­றது.

சிங்­கள மொழி தோன்­று­வ­தற்கு முன்­னர் நாட்டை ஆட்சி செய்த மன்­னனை சிங்­க­ள­வர் எனக் கூறு­வது முட்­டாள்­த­ன­மா­னது.

சிங்­கள மொழி தோன்­றி­ய­தன் பின்­னர் எழு­தப்­பட்ட நூல்­க­ளில் எமது நிலங்­கள் தொடர்­பாக அவர்­க­ளுக்கு விருப்­ப­மான கருத்­துக்­கள் எழு­தப்­பட்­டி­ருக்க­லாம்.

இந்த நாட்­டின் மூலப்­பெ­யர் ‘சிங்­கலே’ என்று றியர் அட்­மி­ரல் வீர­சே­கர குறிப்­பிட்­டி­ருந்­தார். இது பொய்­யா­னது. ஈழம் என்­பதே மூலப் பெய­ரா­கும். ஹெல என்­பது ஈழம் என்­ப­தன் பாளி மொழிச் சொல்­லா­கும்.

சிங்­கலே என்­பது கல­வைச் சொல்­லா­கும். இது தொடர்­பாக பார­பட்­ச­மற்ற பன்­னாட்டு வர­லாற்று ஆய்­வா­ளர்­கள், போலி வர­லாற்­றாய்­வா­ளர்­க­ளு­டன் விவா­தம் செய்து உண்­மை­யைக் கண்­ட­றியவேண்­டும்.

இத்­த­கைய போலி வர­லாற்று ஆய்­வா­ளர்­க­ளால் முன்­வைக்­கப்­பட்ட போலி வர­லாற்­றுப் பதி­வு­களை அழிப்­ப­தற்கு ஒரு மணித்­தி­யா­லம் கூடத் தேவை­யில்லை.

இத்­த­கைய கற்­ப­னை­யான கருத் துக்­களை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு முன்­னாள் பௌத்த திரா­வி­டன் ஒரு­வனை உரு­வாக்க வேண்­டி­யி­ருக்­கும் – என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு,
உரிமைகளிற்காக குரல் கொடுத்தால் இலங்கை அரசு தனது சலுகைகளை பறித்துக்கொள்ளுமென்பது அப்பாட்டமாக தெரிவதாக முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார். வடமாகாண
யுத்தத்தில் உயிர் நீத்த தமது பிள்ளைகளை தாய் தந்தையர் நினைவு கூர்ந்து அழுவதையோ,தமது உடன் பிறப்புக்களை சகோதரங்கள் நினைவு கூர்ந்து

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*