யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும், கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 18 வயதான ம.தர்சிகா என்ற மாணவியே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
சண்டிலிப்பாயிலுள்ள பாடசாலை ஒன்றில் இவர் கற்கிறார். பதின்ம வயதுடைய இவரது இறப்புக்கான காரணம் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரமாக இருக்கிறது.

நுளம்புச் சீலை கட்டிவிட்டு உறங்குமாறு பெற்றோர் மாணவிக்கு கூறியபோதும், மாணவி அவ்வாறு செய்யவில்லை என்றும் அதனால் பெற்றோர் மாணவிக்கு அடித்தனர் என்றும் அதனாலேயே மாணவி அவ்வாறு முடிவெடுத்துள்ளார் என மரண விசாரணையின் பின்னர் இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டு அறையில் குறித்த மாணவி தூக்கில் தொங்கியபோது வீட்டுக்காரர் அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்டபோது அவர் அதற்கு முன்னரே உயிரிழந்து விட்டமை தெரியவந்தது.

பொலிஸார் மற்றும் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந..பிறேமகுமார் இறப்பு விசாரணை மேற்கொண்டனர். சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்