முகமாலையில் இன்று காணி விடுவிப்பு!

கிளிநொச்சி – பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியின் ஒரு பகுதி இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் வேளையில் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

முகமாலைப் பகுதியில் தற்போது மிதிவெடிகள் படிப்படியாக அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்துக்கு மக்களிடம் காணிகள் கையளிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இன்றைய தினம் முகமாலை பகுதியில் ஒரு பகுதி காணி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என பளைப் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 163 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கை சாசனத்தில் சிறிலங்கா கைச்சாத்திட்டுள்ளது. நிலக்
முகமாலைப் பகுதியில் வெடி பொருட்களை அகற்றி மக்களை விரைவாக மீள்குடியேற்றுவதற்கு, வெடி பொருட்கள் அகற்றுவது பாரிய சவாலாகவுள்ளது என பச்சிலைப்பள்ளி
மக்கள் மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்ட மறவன்புலவுப்பகுதியில் இரண்டாயிரமாம் ஆண்டு காலப்பகுதியினில் புதைக்கப்பட்ட மிதிவெடி வெடித்துள்ளது.சுமார் 17வருடங்களின் பின்னரும் அது வெடிக்கும் நிலையினிருந்தமை

About சாதுரியன்

மறுமொழி இடவும்

*