யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுப்படுத்த பல ஆண்டுகள் தேவை – மங்கள சமரவீர

யுத்தம் நிறைவடைந்த போதிலும் அதனால் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பால்நிலை சமத்துவத்துவமின்மையை அகற்றுதல், மனித உரிமைகளை பேணிப் பாதுகாத்தல், சமத்துவமான பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் முன்னெக்கும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் அரசாங்கத்தினால் மட்டும் இந்த சவால்களை வெற்றிகொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகள் மனித உரிமை விவகாரங்களுக்கு அளித்து வரும் முக்கியத்துவம் மற்றும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என பிரான்கோ ஜெர்மன் மனித உரிமை விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்