புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேருக்கு 56 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை!

வில்பத்து வனப்பகுதியில் கெப் வண்டி மீது கிளைமோர் குண்டு தாக்குதல் நடத்தி, மருத்துவர் உட்பட 7 பேரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இன்று இந்த தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

மன்னார், வவுனியா, சாவகச்சேரி மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எட்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

தேடுதல் ஒன்றுக்காக மருத்துவர் உட்பட 7 தேசிய சுற்றுலாப் பயணிகள் கெப் வண்டியில் சென்றுக்கொண்டிருந்த போது கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி இந்த கிளைமோர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்டர்புடைய செய்திகள்
“விடுதலைப் போராட்டத்தில் இருந்த போது நாங்கள் ராஜாக்கள் போன்று சமூகத்தால் வரவேற்கப்பட்டோம்”இப்போது அனாதைகளாகப் பார்க்கப்படுகின்றோம். ஆனால் அதே சமூகத்தில் நல்லவர்களும்
விசுவமடு பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் இன்று திடீரென மரணமடைந்துள்ளார். விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த மூன்று
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடந்த 6 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி இன்று (புதன்கிழமை) திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*