நீண்ட காலமாக புனரமைக்கப்படாது சேதமடைந்த வீதிகளை வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்!

நீண்டகாலமாக சீர்செய்யப்படாது சேதமடைந்த வீதிகளை புனரமைத்து தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

யாழ் பண்டத்தரிப்பு பகுதியில் அமைந்துள்ள கீரியன்தோட்ட வீதி கடந்த 40 ஆண்டுகளாக புனரமைக்கப்படாது குண்டும் குழியுமாக இருப்பதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் அந்த வீதியை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இவ்வாறு யாழ் சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள 2.5 கிலோ மீட்டர் தூரம்கொண்ட ஐய்யனார் வீதியும் சுமார் 20 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத காரணத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை புனரமைத்து தமது போக்குவரத்து தேவையை சீர்செய்து தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இவ்வேண்டுகோள்களை ஏற்று 20.12.2017 அன்று அங்கு சென்ற அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் புனரமைக்கப்படாது இருக்கும் வீதிகளை பார்வையிட்டதுடன் அப்பகுதி மக்களிடம் அதுகுறித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது மானிப்பாய் பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் அருந்தவராஜா அவர்களும் உடனிருந்தார். ஆனந்தி

About இலக்கியன்

மறுமொழி இடவும்