தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு!

ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசுக் கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசுக் கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது தமிழரசு கட்சி , ரெலோ மற்றும் புளேட் ஆகிய கட்சிகளே தற்போது பங்காளி கட்சிகளாக உள்ளன. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் , தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீட்டில் ஜனநாயக போராளிகள் கட்சியை சார்ந்தவர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பறிமுதல் செய்யப்படவுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் வடமாகாணசபையின்
“தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புக்கள் உள்ளன. அதனை பரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன் பிடிவாதங்களைத் தவிர்க்க வேண்டும்” என
“வடக்கு மாகாண முதலமைச்சர் தனது பக்க நியாயங்களைப் பட்டியல்படுத்தியுள்ளார். மறுபக்க நியாயங்களை நாம் முன்வைக்கவேண்டும். அதனை அவசரப்பட்டுச் செய்ய முடியாது.

About சாதுரியன்

மறுமொழி இடவும்

*