காணாமல் போனவர்களின் உறவினர்களை ஏமாற்றி மோசடி: மனித உரிமை ஆணைக்குழு விசனம்

வடக்கில் காணாமல் போனவர்களின் உறவுகளை ஏமாற்றுவது உட்பட மனித உரிமை ஆணைக்குழுவின் பெயரைப் பயன்படுத்தி பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவி தீபிகா உடகம தெரிவித்துள்ளார். இவ்வாறானவர்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்தோடு, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை தமது ஆணைக்குழுவிற்கு 5614 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மனித உரிமைகள் மதிக்கப்படுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் அண்மைக்காலத்தில் பல தீர்ப்புகளை வழங்கியிருந்தது. இவ்வாறான தீர்ப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு, அவை ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகவும் வரவேண்டியவை. எனினும் அவ்வாறு வெளிவராமை கவலையான விடயமென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வடக்கு கிழக்கில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும் இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் இருந்து
தென்னிந்திய திரைப்பட உலகின் நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்றையதினம் (06-04-2018) கிளிநொச்சிக்கு வருகை தந்து அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் வடமராட்சி கிழக்கு மக்களின் போராட்டம் ஓராண்டைக் கடக்கிறது. வடமராட்டசி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*