மாவைக்கு முதுகெலும்பு என்பதே இல்லை-சிவகரன் காட்டம்!

தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் சவப்­பெட்­டி­யின் கடைசி ஆணியை மாவை. சேனா­தி­ரா­சா­தான் அடிப்­பார் என்று ஆரம்­பத்­தில் மங்­கை­யர்­க­ர­சி­ கூறிய கூற்­றுக்கு ஏற்­றாற்போல் தற்­போது அவர் செயற்­ப­டு­கின்­றார். தமி­ழ­ர­சின் அழிவு ஆரம்­ப­மா­கி­விட்­டது. இவ்­வாறு ஜன­நா­ய­கத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வர் சிவ­க­ரன் குற்­றஞ்­சாட்­டி­னார். தமிழ்த் தேசிய விடு­த­லைக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் அறிக்­கை வெளி­யீடு நல்­லூர் இளங்க­லை­ஞர் மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது.

அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்த­தா­வது-:

போருக்­குப் பின்­னர் இலங்­கைத் தமிழ் மக்­களை நடுத் தெரு­வுக்கு கொண்டு வர வேண்­டும், எம்­மைச் சந்தி சிரிக்க வைக்க வேண்­டும் என்ற நோக்­கில் தமிழ்த்தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு வந்­த­வர் எம்.ஏ.சுமந்­தி­ரன்.

மாவை.சேனா­தி­ராசா பரி­தா­பத்­துக்­கு­ரிய மனி­த­னாக இருக்­கின்­றார். அவ­ருக்கு எது­வும் விளங்­காது. அவ­ரைத் தலை­வ­ராக்கி விட்­டால் போதும் அல்­லது நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க்கி­விட்­டால் போம் அல்­லது ஐயா என்று அழைத்­தால் போதும். அவ­ருக்கு முது­கெ­லும்பு என்­றதே இல்லை.

அவ­ரி­டம் ஐந்து தம்­பி­கள் உள்­ளன. ஓம் தம்பி, பார்ப்­பம் தம்பி, பேசு­வம்தம்பி, சந்­திப்­பம் தம்பி, பார்க்­க­லாம் தம்பி என்று அவற்றை வைத்தே ஐம்­பது ஆண்­டு­க­ளைக் கடந்து விட்­டார். 2011ஆம் ஆண்டு கூட்­ட­மைப்­புக்­குள் சுமந்­தி­ரன் வந்­த­போது அது மிக­வும் மோச­மா­னது என்று கூறி­யி­ருந்­தேன்.

இந்த ஏமாற்று அர­சி­ய­லுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க 2013 ஆம் ஆண்­டி­லி­ருந்தே நாம் முயற்­சித்­தோம். அந்­தப் பேச்­சுக்­க­ளில் தீர்க்­க­மான முடி­வு­கள் எட்­டப்­ப­ட­வில்லை.

அனை­வரை­யும் இணைக்­கும் முயற்­சி­க­ளில் சில விட்­டுக்கொடுப்­பு­க­ளைச் செய்ய கஜேந்­தி­ர­கு­மார் தவ­றி­விட்­டார். பல முயற்­சி­களை அவர் எடுத்­தி­ருந்­த­போ­தும் சில தவ­று­க­ளை­யும் அவர் செய்­து­விட்­டார். இந்­தச்சம­யத்­தில் அது தொடர்­பில் விமர்­சிக்க விரும்­ப­வில்லை – என்­றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்