கூட்டமைப்புக்கு அடுத்த தலைமை யார்? சம்பந்தன் பதில்!

கூட்டமைப்பின் அடுத்த தலைமைத்துவம் பற்றியும் கவனம் செலுத்தவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைமை தொடர்பாக அதன் தலைவராக செயற்படுகின்ற இரா. சம்பந்தனிடம் இந்து பத்திரிகை நேர்காணல் கண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் சம்பந்தமாக எந்த திட்டங்களோ அல்லது எதிர்காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றோ இன்னமும் நான் முடிவு செய்யவில்லை. தொடரும் காலத்தில் இது சம்பந்தமாக முடிவுகள் எடுக்கப்படுகின்ற சூழல் தானாக உருவாகும் என நம்புகின்றேன். அது விரைவாக செய்யப்படவேண்டும்.

நான் இந்தப் பதவியில் தொடர்ந்தும் இருக்கமுடியாது. இத்தலைமைத்துவத்தை இன்னொருவர் பொறுப்பெடுக்கவேண்டும். அது இலகுவான விடயமல்ல. எச்சரிக்கையோடும் பொறுமையோடும் செயற்படக்கூடியவராக இருக்கவேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் செயற்றிறன் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் மக்களின் நாளாந்த தேவைகள் பற்றி முன்னேற்றகரமாக வடமாகாண சபையால் செய்திருக்கமுடியும். அதனை வினைத்திறனுடன் செய்திருக்கமுடியும். குறிப்பாக இராணுவ ஆளுநரை மாற்றி மிதவாத ஆளுநர் இப்போது உள்ளார். எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்