எழிலன் உள்ளிட்ட பன்னிருவர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட 12 பேரை முன்னிலைப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட 12 பேரும் இராணுவத்திடம் சரணடைந்ததன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாக இந்த ஆட்கொணர்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் லெனின் குமார் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் மனுதாரர்கள் பலரும் ஆஜராகியிருந்த போதிலும் எதிர்த்தரப்பினர் மன்றில் பிரசன்னமாகாததால், வழக்கு எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான எழிலன், படையினரிடம் சரணடையவில்லை என மேஜர் ஜெனரல் சானக குணவர்தன சாட்சியமளித்துள்ளார்.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் பசில் ராஜபக்சவுடன் இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டார்

About காண்டீபன்

மறுமொழி இடவும்