சாவகச்சேரியில் கூட்டமைப்பு வேட்பாளருக்கு தர்ம அடி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மீது தென்மராட்சியின் சாவகச்சேரி பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பகுதியில் பிரசார நடவடிக்கைக்காக சென்றபோது பொதுமகனொருவரால் இவர் க்குதலுக்குள்ளாகியுள்ளார்.தாக்குதலில் காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் மற்றுமொரு கட்சியின் ஆதரவாளர் வீட்டிற்குள் சென்று பிரச்சார துண்டுபிரசுரங்களை விநியோகிக்க முற்பட்ட வேளையில் தாக்குதல் நடந்துள்ளது.கூட்டமைப்பின் வேட்பாளருடன் சென்ற ஆதரவாளர்கள் தப்பித்தோம் பிழைத்தோமென தப்பியோடிவிட அவர் மட்டும் அகப்பட்டுள்ளார்.தடி மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஏன் இங்கே வந்தாய் எனக்கேட்டு தாக்குதல் நடந்ததாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை வீட்டின் உரிமையாளருடன் இணைந்து அவரது மனைவியும் வேட்பாளரை தாக்கியதாக சொல்லப்படுகின்றது.

அண்மைக்காலமாக கூட்டமைப்பின் வேட்பாளர்களை தமது கிராமங்களினுள் வரக்கூடாதென இளைஞர்கள் அச்சுறுத்தல்விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை முன்னெடுப்பதற்கு கூட்டு அரசாங்கம் தொடர வேண்டியது அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் நாகராசா பகிரதன் என்பவர் பெண் ஒருவரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய்
கூட்டமைப்பின் யாழ் மாநகர சபையின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வானது இன்று மாலை யாழ்ப்பாணம் ஒஸ்லானிய கல்லூரி வீதியில் ஒருவாறாக இடம்பெற்றுள்ளது.மீளக்குடியமர்ந்த

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*