ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போது நாமல் வாழ்த்து தெரிவிக்க காரணம் என்ன? சீமான் கேள்வி!

நான் கட்சி ஆரம்பிக்கும் போது பாராட்டாத ராஜபக்ஸவின் மகன் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவிக்க காரணம் என்ன என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருக்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றில், ரஜினியின் அரசியல் பரவேசம் குறித்து சீமான் அதிரடியாக பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இதன்போதே, ரஜினிக்கு நாமல் தெரிவித்த வாழ்த்து குறித்தும் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

“நான் கட்சி ஆரம்பிக்கும் போது வாழ்த்து தெரிவிக்காத ராஜபக்ஸவின் மகன் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும் போது வாழ்த்து தெரிவிக்க காரணம் என்ன?

எம்மை கொன்று ஒழித்தவன் உனக்கு வாழ்த்து தெரிவித்தால், நான் போராடி கேட்டும் நீதிகளை நீங்கள் எப்படி பெற்றுத்தருவீர்கள்?

ராஜபக்ஸவின் மகன் தமிழினத்தின் தலைவனை எப்படி வாழ்த்துவார்? தமிழினத்தின் முதல்வரை ராஜபக்ஸவின் மகன் வாழ்த்துவாரானால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், அழிக்கப்பட்ட உயிர்களுக்காகவும் போராடும் மக்களுக்கு என்ன உரிமை கிடைக்கும்? என்ன நீதி கிடைக்கும்?” என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழை ஆண்டாள் என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையை முன்வைத்து எச்.ராஜா தரம்தாழ்ந்த சொற்களால் கவிஞர் வைரமுத்துவைத் தாக்கிப்
கர்நாடகா, மராட்டியத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்க முடியுமா? என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். சினிமாவில் நடித்து அரசியலுக்கு வந்தால்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிறகும், இந்த சமூகம் அவரை இன்னும் கொண்டாடுவது ஏன்?

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*