தினகரனின் வெற்றி செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி!

ஆர்.கே நகரில் தினகரன் பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும் என்றும் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

ஆர்.கே நகர் தேர்தலில் தினகரன் அபாரமாக வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் 89,013 வாக்குகள் பெற்று அவர் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிக்கு எதிராக வழக்கறிஞர் எஸ்.வி ராமமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்து இருந்தார். அதன் மீதான விசாரணை இன்று முதல் வழக்காக உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

தினகரன் சட்டசபை செல்லவும் தடை விதிக்க கோரி வழக்கறிஞர் எஸ்.வி ராமமூர்த்தி தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர் மனுவில் நிறைய கேள்விகள் கேட்டு இருந்தார்.

அதன்படி ”சுயேச்சை வேட்பாளர் தினகரன் வெற்றிபெற்றது எப்படி.தினகரன் பணம் கொடுக்காமல் வெற்றிபெற்று இருக்க முடியாது. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கிய பிறகு ஆர்.கே.நகரில் அதிக அளவில் குக்கர்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திலும் நிறைய புகார்கள் இருக்கிறது” என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும் தினகரன் வெற்றி செல்லும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டு இருக்கிறது.

About சாதுரியன்

மறுமொழி இடவும்