பெண்ணொருவரைத் தாக்கியதால் யாழில் கூட்டமைப்பு வேட்பாளர் கைது

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் நாகராசா பகிரதன் என்பவர் பெண் ஒருவரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“வேட்பாளரின் குடும்பத்துக்கும் அயல் வீட்டிலுள்ள குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு இடம் பெற்ற நிலையில் வேட்பாளரின் மனைவி அயல் வீட்டுப் பெண்ணுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அந்தப் பெண் வேட்பாளரின் வீட்டுக்குச் சென்று பேசியுள்ளார். அதனை அடுத்து அந்தப் பெண்ணை வேட்பாளர் தாக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பெண் நேற்று முறைப்பாடு வழங்கியுள்ளார். இதனடிப்படையில் மானிப்பாய் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் நாகராசா பகிரதன் இன்று காலை கைது செய்யப்பட்டார்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எனினும் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டிக்கு வந்தமையால் பொலிஸ் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்