வடக்கு – கிழக்கு இணைப்பு கைவிரித்தது இந்தியா!

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களை ஒன்­றி­ணைப்­ப­தற்­கான அழுத்­தங்­களை இந்­தி­யா­வால் வழங்க முடி­யாத சூழ்­நிலை இருக்­கின்­றது. அது இலங்­கை­யின் உள்­நாட்டு விவ­கா­ரம் என்று இலங்­கைக்­கான இந்­தி­யத் தூது­வர் தரன்­ஜித் சிங் சந்து திட்­ட­ வட்­ட­மா­கத் தெரி­வித்தார்.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்­புக்கு இந்­தியா அழுத்­தங்­க­ளைக் கொடுக்க வேண்­டும் என்று இந்­தி­யத் தூது­வர் தான் ஜித் சிங் சந்­து­வி­டம், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

இந்­தி­யத் தூது­வர் தரன்­ஜித் சந்­துவை கடந்த வெள்­ளிக்­கி­ழமை இந்­தி­யத் தூத­ர­கத்­தில் சந்­தித்­துப் பேச்சு நடத்­தும்­போதே இந்­தக் கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்­தார்.

“வடக்கு, கிழக்கு மாகா­ணங்­கள் இணைப்பு என்­பது இலங்­கை­யின் உள்­நாட்டு விவ­கா­ரம். அத்­து­டன், அது நீதி­மன்­றத்­து­டன் தொடர்­பு­டைய விட­யம். இலங்­கை­யின் உள்­நாட்டு விவ­கா­ரங்­கள் தொடர்­பில் எவ்­வா­றாக அத­னைக் கையா­ள­லாம் என்­பதை இந்­திய நடு­வண் அரசே தீர்­மா­னிக்­க­வேண்­டும். உள்­நாட்டு விவ­கா­ரங்­க­ளில் நாங்­கள் தலை­யி­டப் போவ­தில்லை.

About காண்டீபன்

மறுமொழி இடவும்