வட – கிழக்கு பட்டதாரிகள் தமது மக்களுக்கு சேவை செய்வதில்லை என்கிறார் வடக்கு ஆளுநர்!

வடக்கு கிழக்கு பகுதிகளில் படித்து பட்டம் பெற்ற பலர் தமது மக்களுக்கு சேவை செய்யாமல் வெளி இடங்களுக்கு செல்வதாக குற்றம் சுமத்தியுள்ளார் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சையில் 53 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளதோடு, அதில் நான்கு மாணவர்கள் விசேட சித்தியும் அடைந்துள்ளனர்.

ஆனால் இலங்கையின் பிரதான நகரமான கொழும்பில் உள்ள பாடசாலைகளில் வசதிகள் இருந்தும் அவர்களாள் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியவில்லை என தெரிவித்தார். ஆளுநர் வட மாகாணத்தில் வசதிகள் குறைந்த நிலையிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் கல்வி செயற்பாட்டை பாராட்டினார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்