தேர்தல் தோல்வியால் தி.மு.க என் மீது தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது – தினகரன்

‘தோல்வி காரணமாக, தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், என் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்,” என, எம்.எல்.ஏ.தினகரன்,கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

தோல்வி காரணமாக, மருதுகணேஷ் தவறான குற்றச்சாட்டுகளை, என் மீது சுமத்துகிறார். தேர்தல் அதிகாரிகள், அதற்கு விளக்கம் கேட்கும் போது, உரிய பதில் தருவேன். ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியால், ஆளுங்கட்சிக்கு பயம் வந்துள்ளது. அதனால், என் ஆதரவாளர்களை, கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர்.

கட்சியில் வழிகாட்டு குழு அமைக்கின்றனர். தொண்டர்களே இல்லாமல், யாருக்காக இந்த வழிக்காட்டு குழு என, தெரியவில்லை.

கட்சியை அவர்கள், அழித்து வருகின்றனர். பெயருக்கு தான் கட்சி உள்ளதே தவிர, தொண்டர்கள் யாரும் இல்லை. டில்லி உயர் நீதிமன்றத்தில், கட்சி தொடர்பான வழக்கு உள்ளது.

இதில், சாதகமான தீர்ப்பு வரும் என, எதிர்பார்க்கிறோம். சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால், புதுக்கட்சியை துவங்கும் நிர்ப்பந்தம் ஏற்படும். என தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர் வேண்டும் என்றால் டிடிவி தினகரன் மனது வைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்
மு.க. ஸ்டாலின் ஒரு செல்லாத காசு என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் தோல்வி

About இலக்கியன்

மறுமொழி இடவும்