சிறிலங்காவில் இந்தோனேசிய அதிபர் – முதலீட்டு, வர்த்தக வாய்ப்புகள் குறித்து பேச்சு

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்தார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சிறப்பு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தோனேசிய அதிபரை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, வரவேற்றார்.

இந்தோனேசிய அதிபருடன், 50 பேர் கொண்ட வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவொன்றும் கொழும்பு வந்துள்ளது.

இந்தோனேசிய அதிபருக்கு நேற்று மாலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் 21 பீரங்கிக் குண்டுகள் முழங்க சிறிலங்கா ஆயுதப்படைகளின் வரவேற்பு அளி்க்கப்பட்டது.

இதையடுத்து, அதிபர் செயலகத்தில் சிறிலங்கா அதிபருக்கும், இந்தோனேசிய அதிபருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இன்று காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவுள்ள இந்தோனேசிய அதிபர், வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்