யுத்த காலத்தில் கடத்தல் தொழில் செய்தவர் சாள்ஸ் – ரெட்ணசிங்கம் குமரேஷ் குற்றச்சாட்டு!

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போது, கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த சாள்ஸ் நிர்மலநாதனால் பல இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ரெட்ணசிங்கம் குமரேஷ் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாடாளுமன்றில் 225 உறுப்பினர்கள் இருக்கின்ற போது எவ்வாறு அபிவிருத்தி எனும் போர்வையில் 15 பேருக்கு மாத்திரம் தலா 2 கோடி ரூபா நிதி வழங்கப்படும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை , மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தான் எக்காலத்திலும்,எந்த நேரத்திலும் மக்களுக்கும் குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருக்கு வாழ்க்கையில் துரோகம் செய்ய மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

தனது வரலாற்றை மறந்த சாள்ஸ் நிர்மலநாதன் போராட்டக்குழுக்களை கொச்சைப்படுத்தி அறிக்கை விடும் செயற்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்