சிங்கள மக்களை வடக்கில் குடியேற்றுவது தமிழர்கள் எதிர்காலத்திற்கு ஆபத்து! – டக்ளஸ்

சிங்கள மக்களை வடக்கில் குடியேற்றுவது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு மிகப் பெரிய ஆபத்து என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.மகாவலி கங்கை திட்டம் வடக்கிற்கு வந்ததால் வடக்கில் சிங்களவர்களின் சனத்தொகை அதிகரித்துள்ளது.

வடக்கிற்கு இன்னும் மகாவலி கங்கை வரவில்லை எனினும் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய சுமார் 2 ஆயிரத்து 600 ஏக்கர் காணிகள் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இந்த காணிகளை பெற்றுள்ள சிங்கள மக்களுக்கும் வடக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. தெற்கில் இருந்து அழைத்து வந்து இங்கு குடியேற்றியுள்ளனர். மணலாறு (வெலிஓயா) பிரதேசம் முற்றாக சிங்கள மக்கள் வாழும் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.

டொலர் பார்ம் மற்றும் கென்ட் பார்ம் ஆகிய தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளும் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.அதேவேளை மல்வத்து ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் செட்டிக்குளம் மற்றும் மடு உட்பட சில பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் பறிப்போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை எதிர்கொள்ள வடக்கில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்