வட தமிழீழம் வவுனியா ஏ9 வீதியில் ஒட்டுக்குழு ஈபிடிபியின் பதாதைக்கு தீ வைப்பு!

வட தமிழீழம் வவுனியா ஏ9 வீதியில் அமைக்கப்பட்டிருந்த ஒட்டுக்குழு ஈபிடிபி வேட்பாளர் நா. கிஷ்ஷாந்தனின் தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக இருந்த பதாதைக்கு சிலரால் தீவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த வேட்பாளர் அலுவலகத்தை திறப்பதற்காக வந்தபோது முன்பாக இருந்த பதாகைகள் தீயூட்டப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார். எனினும் குறித்த பதாதைகள் முழுமையாக எரியவில்லை.

இது தொடர்பாக வவுனியா பொலிஸாரும் முறையிப்பட்டுள்ளதாக ஒட்டுக்குழு ஈபிடிபியின் வவுனியா அமைப்பாளர் கு.திலீபன் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்