மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு கடையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

ஒரு கடையில் பற்றிய தீ பின்பு அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது.

உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 5 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்