முள்ளிவாய்க்காலில் நடந்ததை மறக்கட்டாம் – வடக்கு ஆளுனர்!

இலங்கையில் போரின் போது நடந்த குற்றங்களையெல்லாம் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று, மூன்று அரசியல் கைதிகளின் உறவினர்களைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

“இப்போது போர் முடிந்து விட்டது. எனவே போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களையெல்லாம் மறந்து விட வேண்டும் என கூறினார்.

அவற்றை நெஞ்சில் வைத்துக் கொண்டு கோபத்தில் செய்யும் செயல்களால் எந்தப் பயனும் எனவும் குறிப்பிட்டார்.

எனவே, போரில் நடந்த குற்றங்களை மறந்து விட்டு, அனைவரும் அமைதியாக வாழ வேண்டும்.” என்ற அவர் கேட்டுக்கொண்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்