யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ஒன்பது வயது சிறுமியின் உயிரிழப்பு!

யாழில் ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் கோப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தில் இறுகியதால் சுவாசத்தடை ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிவநேசன் அக்சயனி என்ற குறித்த சிறுமி நித்திரை செய்து கொண்டிருந்த போது பெற்றோர் சந்தைக்கு சென்றுள்ளனர்.

சந்தைக்கு சென்று அவர்கள் வீட்டிக்கு வந்த போது சிறுமி கட்டிலில் காணப்படாத நிலையில் அவரை பெற்றோர் தேடியுள்ளனர்.

இதன்போது கழுத்து பகுதி ஊஞ்சல் கயிற்றில் இறுகிய நிலையில் அக்சயனி காணப்பட்டதை அவதானித்த பெற்றோர் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் சிறுமி வைத்தியசாலைக் கொண்டு வரும் முன்பே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது சிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவத்தினரையும் ஒரே நிலையில் வைத்து எடைபோட முடியாது என்று தமிழ்த் தேசியக்
தியாகி திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட புகழேந்தி
பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*