வட தமிழீழம் தென்­ம­ராட்­சியில் சுற்­றுலா மையங்­களை அமைக்க நட­வ­டிக்கை!

வட தமிழீழம் தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் சுற்­றுலா மையங்­களை அமைக்க வடக்கு மாகாண சபை நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.இத­ன­டிப்­ப­டை­யில், கச்­சாய் துறை­மு­கத்தை அண்­டிய பகு­தி­யி­லுள்ள சாளம்­பன் தீவுப்­ப­கு­தி­யில் சுற்­றுலா மையத்தை அமைக்க மாகாண முத­ல­மைச்சு அலு­வ­ல­கம் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளதாக தெரி­விக்­கப்­படுகின்றது.

குறித்த பகு­தியை நிர்­மா­ணம் செய்ய சுமார் 75 மில்­லி­யன் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. சிமெந்­தினாலான இருக்­கை­கள், மற்­றும் சுற்­றுலா வரு­ப­வர்­கள், நீரில் பிர­யா­ணம் செய்ய இயந்­தி­ரப்­ப­ட­கு­கள், நிழற்­கு­டை­கள் உட்­பட ஏனைய தேவை­க­ளும் நிறை­வேற்­றப்­ப­டும் எனத்­ தெரி­விக்­கப்­படுகின்றது.இந்த வேலை­திட்­ட­மும் அதன் பரா­ம­ரிப்­புக்­க­ளும் சாவ­கச்­சேரி பிர­தேச சபை­யால் மேற்­கொள்­ளப்­ப­டும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்