நீண்டகால பிரச்சினைகளை ஐந்து வருடங்களில் தீர்க்க முடியாது: பிரதமர்

அபிவிருத்தி உட்பட நாட்டின் நீண்டகால பிரச்சினைகளை வெறுமனே ஐந்து வருடங்களில் தீர்த்துவிட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு பண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டை ஐந்து வருடங்களில் முன்னேற்றி சிறப்பாக மாற்றுவது கடினமானது. நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாடு குறித்த எதிர்கால திட்டமிடலும், ஒருங்கிணைந்த செயற்பாடும் அவசியம். இல்லையேல் நாட்டை அபிவிருத்தி பாதைக்குக் கொண்டுச் செல்ல முடியாது.

5 வருடங்களில் பராக்கிரமபாகுவாகிவிட முடியும் அல்லது துட்டகைமுனுவாகி விட முடியும் என்று கூறிக் கொண்டு ஆட்சிக்கு வருகின்றனர். ஆனாலும் அது சாத்தியமாகாது.

ஐந்து வருடங்களில் நாட்டை முற்றாக மாற்றிவிட முடியாது. படிப்படியாகவே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்