புலம்பெயர் தமிழர்களே எமது பிரச்சினை: கெஹெலிய

தமிழர்களுடன் சகோதரத்துவத்துடனேயே நாம் வாழ்ந்து வருகின்றோம் ஆனால் இப்போது எமக்கு பிரச்சினையாக இருப்பது புலம்பெயர்ந்து சென்றவர்களே என ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்த அவர்,

நாட்டில் தற்போது ஒற்றுமை காணப்பட்டு வருகின்றது. ஆனாலும் வெளிநாடுகளுக்கு சென்று மீண்டும் நாட்டுக்குத் திரும்பி வர விருப்பமற்ற, பிரிவினைவாத கோரிக்கைகளை போதிக்கும் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களே எமக்கு பிரச்சினையாக உள்ளார்கள்.

சுமந்திரன் கூறியுள்ளார் இந்த அரசாங்கத்திடம் விசேட உதவிகளை நாம் கோரவில்லை, அவர்களிடம் அடிபணியவும் இல்லை ஆனால் எமக்கு 2015 ஜனவரியில் கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றுமாறு கோரி வருகின்றோம் இதற்கு இன்றுவரை பிரதமரோ, ஜனாதிபதியோ பதில் கூறவில்லை.

தற்போதைய சூழலில் ஆட்சியாளர்களிடம் முரண்பட்ட வகையிலானதோர் ஆட்சியே நடைபெற்று வருகின்றது. அதனால் இனியும் மக்கள் ஏமாறாமல் தற்போதைய தேர்தலை முறையாக பயன்படுத்திக் கொண்டு பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்