பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் அவுஸ்திரேலியப் பிரதமர் மன்னிப்பு கோரவுள்ளார்

பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரவுள்ளதாக அஸ்திரேலியப் பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த நான்கு வருடங்களாக இடம்பெற்ற விசாரணையில் பல்லாயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே இந்தாண்டு இறுதியில் தேசிய மன்னிப்பு கோரப்படும் என்று டர்ன்புல் கூறியுள்ளார்.

தேவாலயங்கள், பாடசாலைகள், விளையாட்டு மன்றங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பல பத்தாண்டுகளாக இந்த தொந்தரவுகள் இடம்பெற்றுள்ளன. இந்த தொந்தரவுகளில் தப்பிப் பிழைத்தவர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், குழந்தைகளுக்கு உரிய கண்ணியத்தை வழங்கும் வகையிலும் இந்த நிகழ்வை ஒரு தேசமாக அனுசரிக்கவேண்டும் என குறிப்பிட்ட அவர், குழந்தைகளுக்கு உரிய கண்ணியத்தை அவர்களைப் பாதுகாக்கவேண்டியவர்களே மறுத்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவங்களை ஏதோ சில அழுகிய அப்பிள்கள் என்று புறக்கணித்துவிட முடியாது எனவும் சமூகத்தின் பெரிய நிறுவனங்கள் மோசமாகத் தோல்வியடைந்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான குறைதீர்வுத் திட்டத்தில் இணையும்படி அவர் மாநில அரசுகளையும், நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த நான்காண்டு விசாரணையின்போது 8 ஆயிரம் பேரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டடுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை அறிய முடியாது என விசாரணை முடிவில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்தியாவில்,
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து
சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச்

About இலக்கியன்

மறுமொழி இடவும்