தமிழீழ வைப்பகத்திலிருந்த நகை, பணம் எங்கே மயமானது ?

தமிழீழ வைப்பகத்திலிருந்த நகைகள் மற்றும் பணத்தினை மஹிந்த ராஜபக்ச, அவருடைய சகோதரர்கள் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் பங்கிட்டு கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழீழ வைப்பகத்தில் இருந்த நகைகள் மற்றும் பணம் என்பவை கடந்த அரசாங்கத்தால் மீட்கப்பட்டன. ஆனால் அவ்வாறு மீட்கப்பட்ட பணம் மற்றும் நகைகளுக்காக சரியான கணக்கு காட்டப்படவில்லை.

அங்கிருந்த பணம் மற்றும் நகைகள் மக்களுடையவை. ஆனால் அவற்றை மஹிந்த ராஜபக்ச, அவருடைய சகோதரர்கள் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் பங்கிட்டுக் கொண்டனர்.

தற்போது தமிழீழ வைப்பகத்தின் பற்றுச்சீட்டுடன் அவற்றை பெறுவதற்காக மக்கள் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், மத்திய வங்கியின் ஊழல் தான் இலங்கையின் பொருளாதாரம் பின்நோக்கிச் செல்ல காரணம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ்
பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின்
சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ. நா

About செய்தியாளர்

மறுமொழி இடவும்

*