குப்பிளானில் குலுக்கல் முறையில் ஒரு ஆசனம் வென்றது த.தே.ம.மு

உள்ளூராட்சி சபை தேர்தலில் குப்பிளான் பகுதியில் சிறீலங்கா சுதந்திர கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாள ர்கள் இருவர் 314 வாக்குகளை பெற்றனர்.

மேற்படி இரு வாக்காளர்களும் சம வாக்கினை பெற்ற நிலையில் இறுதி தீர்மானத்தினை எடுப்பதற்காக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இரு கட்சிகள் சார் ந்தவர்கள் முன்னிலையில் இரு கட்சிகளி னதும் பெயர்கள் எழுதப்பட்டு குலுக்கல் மு றையில் ஒரு கட்சியை தேர்ந்தெடுக்க நட வடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கமைய நள்ளிரவு 1 மணிக்கு இரு கட் சிகளினதும் பெயர்கள் குலுக்கப்பட்டது. இ தன்போது அகில இலங்கை தமிழ் காங்கிர ஸ் கட்சி குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட து. இதற்கமைய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சட்டரீதியாக வெற்றி பெற்றுள் ளது என அறிவிக்கப்பட்டது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்