அறுதி பெரும்பான்மையை இழந்தது தமிழ்தேசிய கூட்டமைப்பு தொங்கு நிலையில் 16 சபைகளின் ஆட்சி.

உள்ளுராட்சி சபை தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் தேர்தல் பெறுபேறுகள் தற்போதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் உத்தியோகபற்றற்ற தகவல்களின்படி யாழ்.மாவட்டத்தில் வலி,வடக்கு பிரதேச சபை தவிர்ந்த சகல பிரதேச சபைகளிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு அறுதி பெரும்பான்மையை இழந்திருக்கின்றது.

10ம் திகதி நேற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்கமைய யாழ்.மாவட்டத்தில் 17 உள்@ராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறுதி பெரும்பான்மையை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு 16 பிரதேசசபைகளில் அறுதி பெரும்பான்மையை இழந்திருக்கின்றது. மேலும் சாவகச்சேரி நகரசபை மற்றும் பருத்துறை நகரசபை போன்றவற்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பு 2ம் நிலைக்கு தள்ளப்பட்டு 1ம் நிலையை தமிழ்தேசிய மக்கள் முன்னணி பெற்றுள்ளது. இதேபோல் மற்றய உள்ளூராட்சி சபைகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சமமாக அல்லது சில நூறு

வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு நெருக்கமாக 2ம் இடத்தில் இருக்கின்றது. இந்நிலையில் யாழ்.மாநகரசபை உள்ளிட்ட 17 சபைகளில் 16 சபைகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அறுதி பெரும்பான்மையை இழந்திருக்கின்றது. இதனால் வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஆட்சியமைக்கவேண்டியநிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பி, ஐ.தே.கட்சி, மற்றும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி போன்றவற்றுடன் கூட்டணி அமைக்க இயலாமையினால் கூட்டணி அமைப்பதனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் மட்டுமே கூட்டணி அமைக்க இயலும் என்னும் நிலக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தள்ளப்பட்டிருக்கின்றது. இதேபோல் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் இவ்வாறே இக்கட்டான நிலை உருவாகியிருக்கின்றது.

குறிப்பாக நல்லூர் பிரதேச சபையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போனஸ் ஆசனங்களுடன் 6 ஆசனங்களை பெற்றுள்ளது. அதே சமயம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போனஸ் ஆசனத்துட ன் 5 ஆசனங்களை பெற்றிருக்கும் நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பினால் ஆட்சியமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பு 2 ஆசனங்களை பெற்றிருக்கும் சுயேட்சை குழு ஒன்றுடன் இணைந்து ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கும் நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி யாழ்.மாவட்டத்தில் எதிர்பாராத அளவு வெற்றியை பெற்றிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
“யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதன்மை வேட்பாளர் வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார்” என தமிழ்த் தேசிய
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவசாகம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள
வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு சொந்தமான காணியை பொலிஸ் திணைக்களத்திற்கு நிரந்தரமாக வழங்கும் தீர்மானத்தை மாற்றவேண்டும். மக்களுக்குச்சொந்தமான

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*