இடைக்கால அறிக்கையை மக்கள் நிராகரிக்கவில்லையாம் – சுத்துமாத்து சுமந்திரன்

நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் இடைக்கால அறிக்கையை நிராகரித்து வாக்களிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தின் தெரிவித்துள்ளார்.

தெற்கில் மகிந்த வென்றுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி இடையில் தடைப்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழ் மக்களுக்கு சமஷ்டி தான் தீர்வு என்ற நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என சிறிலங்கா அரச முகவர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் – புதிய கதிர்காமர் – மைத்திரியுடனும் ரணிலுடனும் தனது இதயங்களை சங்கமித்து படகேறியிருப்பவர். வடமாகாண சபையில் தமிழின அழிப்பு தீர்மானம் வராமல் தடுப்பதற்கு முயன்றவர். மகிந்த ஆட்சிக்காலத்திலேயே இந்த தீர்மானம் வெளிவந்திருந்தால், சர்வதேச அளவில் மகிந்தவிற்கு பல நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், இனஅழிப்பு தீர்மானம் வடமாகாண சபையில் நேரகாலத்தோடு நிறைவேற்றுவதற்கு சுமந்திரன் முட்டுகட்டையாக இருந்ததால், மகிந்தவை சர்வதேச குற்றவாளிக் கூண்டை நோக்கி தள்ளுவது தாமதமடைகிறது.

அன்று மகிந்தவை காப்பாற்றியவர், இன்று மைத்திரியையும் ரணிலையம் காப்பாற்றுவதற்காக ஜெனிவாவரை சென்றவர் சுமந்திரன்.

2005 தொடக்கம் 2009 மே வரை யாழ்ப்பாணத்தில் காணாமல் போன பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சித்திரவதையின் பின் படுகொலை செய்யப்பட்டமைக்கு பொறுப்பாக இருந்தவர் சிறீலங்கா புலனாய்வுத்துறை அதிகாரியான பிடிகேடியர் சக்கி. இவர் பணிப்பாளராக இருக்கும் வெரித்த ஆய்வு நிலையத்தில்தான் சுமந்திரனுக்கான அறிக்கைகள் எல்லாம் தயாரிக்கப்படுகிறது.

படுகொலையாளர்களுடன் கூட்டணி அமைத்துள்ள சுமந்திரன் எப்படி தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தருவர் . புலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டென்று சொல்லித் திரியும் சுமந்திரன், சிங்கள அரசாங்த்தை காப்பாற்றுவதற்கு துடிக்கிறார்.

உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழ் இளைஞர்கள் சித்திரவதை செயப்பட்டது சர்வதேச ஊடகங்களியே வெளிவந்தது. ஆனால், அன்றிருந்த இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவை காப்பாற்றும் முகமாக, ராஜபக்ச அரசாங்கம் புனர்வாழ்வை மிகவும் சிறப்பாக வழங்குகின்றதென்று புகழாரம் செய்தவர்.

சுமந்திரனும் சம்பந்தரும் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடாத்தப்பட்டது என நீண்டகாலத்திற்கு முன்னர், ஒரு சில தடவை குறிப்பிட்டிருந்தனர். ஆயினும் சலுகைகளுக்கு விலை போனபின்னர் இனஅழிப்பு எனக்கூறுவது தமிழ் மக்களுக்கு பாதகமாக மாறும் எனக் கூறி அதிலிருந்து தம்மை தூரப்படுத்தி மக்களை தவறாக வழிநடாத்த முற்பட்டுள்ளனர். இதனை முறியடிக்கும் முகமாகவே வடமாகாண சபையில் தமிழின அழிப்பு தீர்மானத்தை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நிறைவேற்றினார்.

நாங்கள் தமிழீழம் கேட்டவில்லை எனக் கூறும் சுமந்திரன், அர்ப்பணிப்புகளாலும் உயிர் ஆபத்து நிறைந்த போராட்டங்களாலும் அனைத்துலக மயப்பட்ட தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை தற்போது உள்நாட்டு பொறிமுறைக்குள் முடக்குவதற்கு கொழும்பை மையமாக கொண்ட அவரது எடுபிடிகளுடனிணைந்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். இதற்காக, சிறீலங்கா அரசாங்கத்தின் புலனாய்வுத்துறைக்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் ரொகான் குணரட்ண சுமந்திரனை பாராட்டி புகழாரம் சூட்டினார். யாழ் பல்கலைக் கழக சமூகமும், காணமற் போனோரின் உறவுகளும் உள்நாட்டு பொறிமுறையை நிராகாரிக்கிறோம், ஜனாதிபதி ஆணைக்குழுக்களில் எமக்கு நம்பிக்கை இல்லை, எமக்கு அனைத்துலக விசாரணையே வேண்டும் என போராட்டங்களை நடாத்திய போது, இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்குள் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற மாயையை சுமந்திரன் அனைத்துலக அரங்கில் உருவாக்கினார்.

இத்தகையவரே, தன்னால் தான் ஐ.நா விசாரணை நடந்தது என்ற தோறணையில் கூறிவருகிறார். ஆனால், ஐ.நா விசாரணை 2012 ல் ஆரம்பித்த போது, அதனை மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவதற்காய் எதிர்த்தவர் சுமந்திரன்.

அரசியல் கைதிகளை விடுவிக்கிறேன் என்று சுமந்திரன் பொய்யான தகவல்களை தெரிவித்ததை முன்னால் நீதியமைச்சரின் முரண்பட்ட தகவல் ஊடாக அறியமுடிந்தது. விசாரணையின்றி நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வைத்து, தனது அரசியல் எதிர்காலத்திற்காக அரசியல் செய்யும் சுமந்திரன்.

ஒற்றையாட்சி என்று மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் போட்டால், தமிழ் மக்கள் மைத்திரிக்கு வாக்களிக்கமாட்டார்கள். ஆகவே, அந்த வாசகத்தை எடுப்பதே தமிழ்மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வழியமைற்கும் என சிங்கள பேரினவாதிகளுக்கு ஆலோசனை வழங்கியவர் சுமந்திரன். சலுகைகளுக்கு விலைபோன சுமந்திரன் சிங்கள மக்களுக்கு விரும்பாத வார்த்தைகளை(6) தீர்வு திட்டத்தில் பயன்படுத்த வேண்டாம் என உரிமைக்காக போராடும் தமிழர்களுக்கு போதிக்க முற்பட்டவர்.

அத்துடன், மைத்திரி(8) ரணில் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவார்கள் என்ற மாயையும் உருவாக்கினார். இதற்கெல்லாம் ஒரு துணையாக, தான் ஒரு தமிழன் என்ற அடையாளத்தை லக்ஸ்மன் கதிர்காமர் பாணியில் பயன்படுத்துகிறார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து
விடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*