த.தே.ம.மு நல்லூர் பிரதேச சபை ஆட்சியை பிடிக்க சந்தர்ப்பம்.

நல்லூர் பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுயேட்சை குழுவுடன் இணைந்து கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.

நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் நல்லூர் பிரதேச சபையில் போனஸ் ஆசனங்களுடன் சேர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பு 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இதேவேளை தமிழ்தேசிய மக்கள் முன்ன ணி 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இதேபோல் முன்னாள் மாகாண அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான பொ.ஜங்கரநேசன் தலமையில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு 2 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவுடன் கூட்டணி வைத்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நல்லூர் பிரதேச சபையில் ஆட்சியமைக்க வாய்ப்புகள் உள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்