வடக்கு கிழக்கில் மாற்றத்தின் அவசியத்தை உணர்த்தியுள்ள தேர்தல்

நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் தெற்கில் சிங்கள மக்கள் தொடர்ந்தும் மகிந்தவுடன் தான் உள்ளார்கள் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்பவற்றை ஒப்பிடும் போது மகிந்தவோ ரணிலோ மக்கள் ஆதரவில் பெரியளவிலான ஏற்ற இறக்கங்களை அடையவில்லை. சிறுபான்மை இனங்களின் வாக்குகளே கடந்த ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது .

ஆனால் ஆனால் வடக்கு-கிழக்கில் நடந்துமுடிந்துள்ள தேர்தல் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளது . பெரும்பாலான சபைகளில் அக்கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய பேரவை (தமிழ் தேசிய மக்கள் முன்னனி) வடக்கில் கணிசமான இடங்களை கைப்பற்றியுள்துடன் சில நகரசபைகளையும் பிரதேச சபைகளையும் கைப்பற்றியுள்ளது. இது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான மாற்று அரசியல் பாதையின் அவசியத்தை மக்கள் உணர்துள்ளதை தெட்டத்தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டுள்ள EPRLF வேட்பாளர்களும் சில இடங்களில் வெற்றிபெற்றுளளனர். தமிழர் விடுதலைக்கூட்டணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் எதிர்பார்க்கப்பட்டிருந்த தேர்தல் கூட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தால் நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு படு தோல்வியை சந்தித்திருக்கும்.

அத்துடன் வடக்கில் ஈபிடிபியும் கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரும் பெற்றுள்ள கணிசமான ஆசனங்கள் அவர்கள் கடந்த கால ஆட்சியின்ஊடாக மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட நன்மைகளின் பிரதிபலனை வெளிகாட்டியுள்ளது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படுவதன் விளைவாகவும் பார்க்கமுடியும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இந்த கட்சிகளுக்கும் இடையில் பெரிய வேறுபாட்டை கொள்கை அடிப்படையில் மக்களால் காணமுடியவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதேச்சிக்கார செயற்பாடு மற்றும் சிங்கள அமைச்சர்கள் போல இராணுவ பாதுகாப்புடன் தமது சொந்த மக்களை காணுவதற்கு செல்லும் சில உறுப்பினர்களின் செயற்பாடுகள் போன்றவையும் தமிழ் மக்களின் வாக்குகளை இம்முறை சிதறடித்துள்ளது.

About சாதுரியன்

மறுமொழி இடவும்