இணைந்து செயற்படுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பின்னிற்காது!

வடக்கு- கிழக்கில் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய பலமான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பின்னிற்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக செயற்படும் கட்சிகளுடன் இணைந்து கொள்வதற்கு பின்னிற்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை திருகோணமலையிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேசசபை தேர்தலில் போட்டியிட்டவர்கள் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என வலியுறுத்திய இரா. சம்பந்தன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒத்தழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே
அரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்ட, மகிந்த ராஜபக்சவின் கவனம் தற்போது
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ்

About காண்டீபன்

மறுமொழி இடவும்