வெளியில் இருந்து ஆதரவு வழங்குவோம் ஈ.பி.டி.பி தெரிவிப்பு.

உள்ளுராட்சி சபை தேர்தலில் அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதென ஈழமக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்திருப்பதாக அக்கட்சி யின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

உள்ளுராட்சி சபை தேர்தலில் சகல கட்சிகளும் பெருமளவு சபைகளில் அறுதி பெரும்பான் மையை இழந்திருக்கும் நிலையில் தொங்கு நிலையிலேயே நிற்கின்றன. இந்நிலையில் ஈ ழமக்கள் ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கேட்டபோதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக அவர் கூறுகையில், உள்ளுராட்சி சபைகளில் அதிகபடி யான ஆசனங்களை பெற்ற கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவ வழங்குவதென இன்று நடைபெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச்சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக் கின்றது. இதனடிப்படையில் அதிகபடியான ஆசனங்கள் பெற்ற கட்சிக்கும்,

அவர்கள் மேற்கொள்ளும் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளுக்கும் வெளியில் இருந்து ஆதரவினை வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதேபோல் அதிகபடியான ஆசனங்க ளை பெற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் எங்கள் கட்சியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் அந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.

தொடர்டர்புடைய செய்திகள்
வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணசபையின்
கிடைக்கப்பெறுகின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் மக்களின் நலன்கள் தொடர்பில் ஆலோசனைகள் சொல்வதாக் டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்துள்ளார். தமிழ் தேசிய
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க உள்ளிட்டோரின் கொலையுடன் தமது கட்சிக்கு தொடர்புள்ளதாக பொய் பிரசாரங்கள் செய்யப்பட்டதென,

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*