முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிப்புச் சம்பவம் சில வீடுகளுக்கு சேதம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சில வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றிருப்பதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக் கூலத்திற்கு பிரதேச நபர் ஒருவர் தீ வைத்திருக்கின்றார்.

இதன்போது குப்பைக் கூலத்திற்குள் இருந்த ஆர்.பி.ஜி ரக வெடிபொருள் வெடித்ததினால் குப்பை மேட்டிலிருந்த சில கழிவுப் பொருட்கள் அருகிலுள்ள வீடுகள் மீது சிதறி வீழ்ந்திருக்கின்றன.

இதன் காரணமாக சில வீடுகளுக்கு சிறிதளவான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும் இந்த வெடிப்புச் சம்பவத்தினால் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

யுத்தத்திற்குப் பின்னர் முல்லைத்தீவுப் பகுதியில் வெடிபொருள் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதோடு அப்பணிகளில் இந்த வெடிபொருள் கைவிடப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
கிளிநொச்சி மாவட்டம் பளை பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
மன்னாரில் நேற்று கிளைமோர் குண்டு ஒன்று வெடித்ததில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். வீடு ஒன்றில் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டபோது
திருகோணமலை-மொறவெவ விமானப்படை பயிற்சி முகாமில் இன்று வெடிபொருள் வெடித்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நால்வரும் திருகோணமலை

About காண்டீபன்

மறுமொழி இடவும்