மதில் வீழ்ந்ததில் இராணுவத்தினர் நால்வர் காயம்! தியத்தலாவையில் சம்பவம்!

தியத்தலாவை இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர் மீது மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்து தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இராணுவ வீரர்கள் தியத்தலாவை இராணுவ முகாமின் சுற்றுலா விடுதிக்கு அருகில் வடிகான் ஒன்றை அமைத்துக்கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் நிலை கவலைக்கிடமாக இல்லையெனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்