துரோகி டக்ளஸ்க்கும் கூட்டமைப்புக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம்!

கிடைக்கப்பெறுகின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் மக்களின் நலன்கள் தொடர்பில் ஆலோசனைகள் சொல்வதாக் டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கைகளில் உள்ளுராட்சி சபைகளை வீழ்வதை தடுக்க கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகளது ஆட்சிகளை கைபற்ற ஈபிடிபி ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது.

இதற்கு பிரதிபலனாக மத்தியில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சு பதவியினை பெறவதற்கு கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்காதென்ற உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களது நலன்சார்ந்தும் அவர்கள் வாழும் பகுதிகள் அபிவிருத்தி தொடர்பிலும் ஆலோசனை சொல்லும் அருகதை எமக்கு மட்டுமே உண்டு. அந்த வகையிலேயே மக்களது தேவைப்பாடுகளையும் அவர்களது உரிமைகள் தொடர்பிலும் அதிகளவான அக்கறையுடன் எமது செயற்பாடுகளை கடந்த காலங்களில் முன்னெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்திக் காட்டியும் இருக்கின்றோம்.

அந்தவகையில் இப்பகுதி மக்களது தேவைப்பாடுகளை கடந்த காலங்களில் முடியுமானவரையில் அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.

இம்முறையும் மக்கள் எமக்கு முழுமையான ஆதரவுப்பலத்தை தராதபோதிலும் கிடைக்கப்பெற்றுள்ள குறைந்தளவு பலத்தைக்கொண்டு காணப்படும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவுள்ளதாகவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் மீண்டும் மஹிந்த ஆட்சி பீடமேறலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மைத்திரி அரசில் அமைச்சர் பதவியை பெற்று மஹிந்தவின் கோபத்திற்குள்ளாக தயாராகவில்லையென ஈபிடிபி உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருபுறம் கூட்டமைப்பு மைத்திரி அரசில் அமைச்சர் பதவியை பெற்றுத்தர முன்வந்துள்ள நிலையில் டக்ளஸ் இரு தோணியில் கால் வைத்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்