ரணிலை தொடர்புகொண்டு உரையாடிய மகிந்த-ஒப்புக்கொண்ட ரணில்

மகிந்த ராஜபக்சவிடம் இருந்து தமக்குத் தொலைபேசிய அழைப்பு வந்தது உண்மையே என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகத் தேவையில்லை என்று மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் பேசும் போது ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறினார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

ஆனால், அது முழுப்பொய் என்று மகிந்த ராஜபக்ச நிராகரித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று அலரி மாளிகையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “ ஆம், இந்த வாரத் தொடக்கத்தில் நான் நாடாளுமன்றத்தில் இருந்த போது மகிந்தவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

பிரதமர் பதவியில் இருந்து விலகிச் செல்லப் போகிறீர்களா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு நான், அரசியலமைப்பின் படி எமது பணிகளை தொடரப் போகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் மிகவும் நல்லது” என்று கூறினார் எனப் பதிலளித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று முன்தினம்
இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளில் பௌத்தமதத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று காலை கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதியை
வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*